திருவள்ளூர், மார்ச் 12- தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இருவார ஊட்டச்சத்து விழா அங்கன்வா டிகள் உள்ள கிராமங்களின் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் ஆயிரம் நாட்கள் அதாவது ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவிக்கும் நாள் வரையிலான 270 நாட்கள், குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை யிலான 180 நாட்கள், ஆறு மாத முடிவிலிருந்து 2 வயது வரை யிலான 550 நாட்களின் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் விதமாகவும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள் ஆகியோரிடையே ஏற்படும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைக்கும் பொருட்டு வளரி ளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய இரும்புச் சத்து மாத்திரைகளின் முக்கியத்துவம் குழந்தை களின் முதல் ஆறு மாத காலங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு இணை உணவு அளிக்கப்பட வேண்டியதின் முக்கியத்துவத்தையும் குறிப்பாக கை கழுவு தல், தன்சுத்தம், வயிற்றுப் போக்கு மையமாக வைத்து நடை பெறுகிறது. எனவே, அருகில் இருக்கும் அங்கன்வாடி மையங் கள், அரசு தலைமை மருத்துவமனைகள், துணை மருத்துவ மனைகள் மற்றும் பஞ்சாயத்து அளவில் நடைபெறும் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனடைய ஆட்சித் தலை வர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.