tamilnadu

காட்டுப்பள்ளி குடிநீர் ஆலையில் 41 பேருக்கு கொரோனா தொற்று தொழிற்பேட்டைகளில் பரிசோதனை நடத்த சிஐடியு கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 14- கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பணி யாற்றும் 41 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள கட்டுப்பள்ளியில்  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது. இங்கு 56 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனர். 20  பேர் நிறுவனத்தின் அதிகாரிகளாக உள்ளனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 29 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 12 அதிகாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தனியார் மருத்துவமனையிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் பூந்தமல்லியில் உள்ள  அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் காட்டுப்பள்ளி குப்பத்தை  சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி துரை இறந்து விட்டார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில்  அச்சம் நிலவுகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி, மீஞ்சூர், தேர்வாய் கண்டிகை, காக்க ளூர் ஆகிய இடங்களில் உள்ள சிப்காட்  தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிலாளர்க ளுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரி யும் தொழிலாளர்களுக்கும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சை அளிப்ப தில் பாகுபாடு காட்டக் கூடாது என சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.விஜயன் வலி யுறுத்தி உள்ளார்.