tamilnadu

img

3 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு  கொரோனா தொற்று பரிசோதனை நடத்த தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

காங்கயம், மே 4- தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் 3 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு கொரோனோ தொற்று பரிசோதனை நடத்த வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:  கொரோனோ வின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில், கரோனா தொற்றிலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,654 கிராம ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் நிரந்தர, தற்காலிக ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே, 3 லட்சம் தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் விதமாக, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனோ தொற்று குறித்த பரிசோதனையை உடனடியாக நடத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.