தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை
சென்னை, ஜூலை 28- தற்காலிக கவுரவ விரிவுரையாளர்க ளுக்கு யுஜிசி விதிப்படி ஊதியம் வழங்க வேண்டுமென்று தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தலித் விடு தலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ச. கருப்பையா முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படக்கூடிய தனி யார், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுய நிதிக்கல்லுரிகள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் சுமார் 1.50 லட்சம் பேர் தற்கா லிக கவுரவ விரிவுரையாளர்களாக பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கு யுஜிசி விதிப்படி 45 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், அதிகபட்ச மாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங் கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களையும், ஓய்வு பெற இருப்பவர்களையும், கூடுதலாக பணி அமர்த்துவதால் புதிய பணியிடங்கள் மறுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. எனவே, இந்த நட வடிக்கையை தடுக்க வேண்டும்.உதவி பேராசிரியர் மற்றும் கவுரவ விரிவுரை யாளர்கள் பாரபட்சமின்றி, யுஜிசி விதிப்படி பொதுத்தேர்வு நடத்தி, தகுதி அனுபவத்தின் அடிப்படையில், இட ஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.