tamilnadu

img

அரசு, தனியார், சுயநிதி கல்லூரிகளில் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிரந்தரப்பணி வழங்குக... தமிழக அரசுக்கு தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை....

மதுரை:
அரசு,தனியார், சுயநிதி கல்லூரிகளில் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து  தலித் விடுதலை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் கலை (ம) அறிவியல், மருத்துவம், பொறியியல், பாரா மெடிக்கல்ஸ் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டு செயல்படக்கூடிய தனியார், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக்கல்லூரிகள், மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்,சென்னை பல்கலைக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பல்கலைக்கழகங்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும்சுமார் 15 ஆயிரம் கல்லூரி  பேராசிரியர்களுக்கு முறையாக கடந்த  10 ஆண்டுகளாகயுஜிசி  விதிமுறைகளின் அடிப்படையில் ஊதியமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.45 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் எனவிதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டும், மேற்கண்ட அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றக்கூடிய அனைத்து கெளரவ விரிவுரையாளர்களுக்கும் மாதச் சம்பளமாக அதிக பட்சமாக ரூ.20 ஆயிரம்  மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனைக்குறித்து உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய  ரூ. 45 ஆயிரம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.மேலும், அரசு(ம) தனியார், அரசுஉதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உறுப்புக் கல்லூரிகளில் ஓய்வுபெற்றவர்களையும், ஓய்வுபெற இருப்பவர்களை யும், கூடுதலாக பணி அமர்த்துவதால் புதிய பணியிடங்கள் மறுக்கப்படுவதோடு, இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் இச்செயல்அமைந்துள்ளது. அதுபோன்ற நடவடிக்கை களை தடுக்க வேண்டும்.

ஆகையால், இனிவரும் காலங்களில் அனைத்து கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் மற்றும் கெளரவ விரிவுரையாளர்கள் எந்தவிதமான பாரபட்சம் இல்லாமல் யுஜிசி விதிமுறைகளின்படி பொதுத்தேர்வு நடத்தி தகுதி, அனுபவத்தின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களை செய்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.