tamilnadu

லஞ்ச ஒழிப்பு காவல்துறை என பணம் கேட்டு மிரட்டியவர்கள் கைது

திருவள்ளூர், அக்.6-  திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற வட்டார போக்கு வரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக வட்டார போக்குவரத்து அலுவலராக ஜெயபாஸ்கரன் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயா பாஸ்கரனுக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்பாக ஒரு தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் தாங்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை யினர் என்று கூறப்பட்டு, ரூ. 50 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன்(55) திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு தொலைபேசியில் அழைத்த  எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் சென்னை காஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் (27) மற்றும் அவரது அண்ணன் ஜனார்த்தனன்(31) ஆகிய இருவரை திருவள்ளூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.