இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு தின பேரணி அவிநாசியில் இன்று நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு அவிநாசியில் புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக துவங்கிய அச்சங்கத்தினரில் பேரணி, பழைய பேருந்து நிலையம் கடந்து சேவூர் சாலை வழியாக, அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள பொதுக்கூட்ட திடல் வரை நிறைவடைந்தது. இந்தப் பேரணியை அமைப்பின் அகில இந்திய துணைச் செயலாளர் பி.எஸ்.சஞ்சீவ், மாநிலச் செயலாளர் தெள. சம்சீர் அகமது ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் ந.விமல் ராஜ், மாவட்டச் செயலாளர் ச.மணிகண்டன், அவிநாசி ஒன்றிய தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் சி.கி. ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
