தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள்
தில்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தெருநாய்கள் அதிகமாக உள்ள நிலையில், தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தில்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன்? கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.