வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
சிவகங்கை, டிச.29- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. இந்த கணக் கெடுப்பு பணிகள் சரணாலயத்தில் உள்ள 9 கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டன. இதில் திருப்பத்தூர் அப்சா கல்லூரி மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவி கள், பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து தொலைநோக்கி மற்றும் “மெர்லின்” செயலி உதவியுடன் பறவைகளை அடையாளம் கண்டு கணக்கெடுத்தனர். இதில் நத்தை கொத்தி நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன. வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்தார்.
