மூணாறில் பனிப்பொழிவுக்கு நிகராக குளிர்
மூணாறு, டிச. 29- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நிலவும் கடுமையான உறைபனி காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கடுமையாக நிலவி வரும் உறைபனி காரணமாக மூணாறு பகுதிகளின் புல்வெளிகள் தோட்டங்களில் பனிபடர்ந்தது போல உள்ளது. நல்லதண்ணி, தென்மலை, சிட்டிவாரை மற்றும் செண்டுவாரை போன்ற இடங்களில் சில நாட்களாகவே 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை மட்டுமே பதிவாகிய தால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேயிலை தோட்டப் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெளியே நிறுத்தப்படும் வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்படும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேயிலைச் செடிகள் கருகி வருகிறது. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
