நாங்கள் சாமி கும்பிட வந்தோம்! ‘அவர்கள்’ அரசியல் செய்ய வந்தார்கள்!
டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8 மணி இருக்கும். திருப்பர ங்குன்றம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து கொண்டிருந் தார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், நடக்கும் திறன் உள்ள பெரியவர்கள் என அனைத்து வயதினரும் வலம் வந்து கொண்டிருந்தனர். கும்பலாகப் பலர், இரண்டிரண்டு பேராகச் சிலர், குடும்பத் துடன் அல்லது தனித்தனியாக என நடந்து சென்றவர்களிடம் அன்றைய தினத்தின் பரபரப்பு ஏதும் இல்லை. அரசியலா? பக்தியா? ஆம், அன்றுதான் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன், தனது மூன்றாவது உத்தரவை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் எதி ரொலியாக ஊடகங்களிலும், சமூக வலைதளங் களிலும் உச்சகட்ட பதற்றம் நிலவியது. ‘விட்டேனா பார்’ என்கிற விதமான அந்த உத்தர வின் பின்னணியில் மதவெறி சக்திகளின் கூக்குரல் காதுகளைக் கிழித்துக் கொண்டி ருந்தது. நாட்டின் அரசமைப்புச் சட்டமும், நீதிமன்ற ஒழுங்குமுறையும் அதன் காவ லர்கள் என்று கட்டமைக்கப்பட்டவர்களா லேயே சிதைந்து கொண்டிருந்தன. ஆனால், இந்தப் புறச்சூழலின் எந்தத் தாக்கமும் இன்றி அகவயமான பக்தி உணர்வுடன் பக்தர்கள் உறுதியாக நடந்து கொண்டிருந்தார்கள். நடுத்தர வயதுடைய ஒரு பக்தரிடம் பேசினோம். “தீபம் ஏற்றவிடா மல் தடுக்கப்படுவதாகச் சிலரும், இந்துக் களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகச் சிலரும் சொல்கிறார்களே?” என்றோம். எதையும் யோசிக்காமல் சட்டெனப் பதில் சொன்னார் அவர்: “நாங்கள் சாமி கும்பிட வந்திருக்கி றோம். அவர்கள் அதில் அரசியல் செய்ய வந்திருக்கிறார்கள்.” நீதியரசரின் உத்தரவை ஒரு நொடியில் தவிடுபொடியாக்கி விட்டு, அந்த எளிய மனிதர் ‘முருகா’ என்று உச்சரித்தவாறே தன் நடை யைத் தொடர்ந்தார். மக்களின் அமைதி அடுத்தவரை அணுகியபோது அவர் சற்று விரிவாகவே பேசினார். “எனக்கு விபரம் தெரிஞ்ச காலத்திலிருந்தே வாழ்க்கைப் பிரச்ச னைகள் சார். ஓடுறோம், உழைக்கிறோம். பிள்ளைகளை எல்லாம் கட்டிக் கொடுத்தாச்சு, நல்லா இருக்காங்க. ஆனா ஒரே ஓட்டமா வாழ்க்கை இருக்கு. எங்க அப்பாவோட இங்க வந்து நடக்க ஆரம்பித்தேன். அது ஒரு நிம்மதி சார்... அமைதி சார். இங்கயும் அமைதி இல்லாம ஏன் சார் செய்றாங்க? இத்தனை வருசமா வர்றேன், இவங்க திடீர்னு என்னென் னவோ சொல்லி பதற்றப்படுத்துறாங்க சார்” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட்டுப் பேசியவரை வாஞ்சையோடு கரம் பற்றி சிறிது தூரம் நடந்தோம். இப்படி மக்கள் விதவிதமாகப் பேசினார் கள். “மன அழுத்தம் குறையுது” என்றார் ஒரு மூத்த சகோதரி. “தெம்பா இருக்குது அண்ணே” என்றார் இளைய சகோதரி ஒருவர். “மதம் ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக் கிறது; இதயமற்ற உலகின் இதயமாக இருக் கிறது” என்று அறிவாசான் மார்க்ஸ் எத்தனை தத்ரூபமாக மதத்தையும், இறை நம்பிக்கை யையும் வரையறுத்துள்ளார்! நமது கண்கள் நிறைந்து, மனது வலிமையடைகிறது. அடுத்த டுத்த காட்சிகள் இதனை மேலும் மெய்யாக்கின. பிழைப்பு தேடும் உழைப்பாளிகள் அதிகாலையின் அமைதி சூழ்ந்திருக்க திருப்பரங்குன்றத்தின் கடை வீதிகளில் நடந்து கொண்டிருந்தோம். சாலைகளின் இருபுற மும் வரிசையாகக் கடைகள். நெற்றியில் திரு நீறு அணிந்த ஆண்கள், பெரிய குங்குமப் பொட்டிட்ட பெண்கள் வேகவேகமாகப் பொருட்களை அடுக்கி கடைகளைத் திறந்து கொண்டிருந்தனர். அவர்களின் வீட்டுச் சிறு வர், சிறுமிகளும் உதவிக்கு நின்றனர். இரண்டு, மூன்று மரப்பலகைகளைக் கொண்ட சின்னச் சின்னக் கடைகள். அவற்றின் மொத்த முதலீடே பத்தாயிரம் முதல் இரண்டு லட்சம் வரைதான் இருக்கக்கூடும். இதற்குள்தான் அவர்கள் வாழ்க்கை இருக் கிறது. அந்த அக்கறை, அவர்கள் பொருட் களை அடுக்கி வைக்கும் அழகில் வெளிப்படு கிறது. வாங்குபவர்களோ பச்சை, கருப்பு அல் லது காவி நிற வேட்டியணிந்த ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள். ஆங்காங்கே சிவப்பு அல்லது மஞ்சள் நிறச் சேலையணிந்த பெண் பக்தர்கள் பொருட்களின் விலையைக் கேட்டுப் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த சீச னில் எப்படியாவது கரையேறிவிட வேண்டும் என்பது அந்தச் சிறுகடை வியாபாரிகளின் கண்களில் தெரிந்தது. இவர்கள் மனதில் இருக்கும் கடவுள் இவர்களுக்கு உதவுகிறவ ராக இருக்கிறார்; அவர் யாரோடும் சண்டை போடச் சொல்லாதவராகவே இருக்கிறார். திணிக்கப்படும் பதற்றம் “மத நல்லிணக்கம் காப்போம்! மக்கள் ஒற்றுமை காப்போம்! மதுரை மண்ணில் மத வெறிக்கு இடமில்லை!” என்ற துண்டறிக்கை களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 250-க்கும் மேற்பட்ட குழுக்கள் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உரையாடுகிறார்கள். மக்களோடு இரண்டறக் கலந்து தோழர்கள் நடத்தும் அந்த உரையாடல்கள் உயிரோட்டமானவை. “இத்தனை ஆண்டுகள் இல்லாத பதற்றம் இப்போது ஏன் வருகிறது? யார் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள், யார் வேண்டாம் என் கிறார்கள்? எதுக்குக் கோவில் விவகாரத்தில் கோர்ட் அதிரடியாக உத்தரவிடுகிறது?” என மக்கள் தங்கள் புரிதலுக்கு ஏற்பக் கேட்கிறா ர்கள். சமூக வலைதளங்களில் நிலவும் பதற்றத்தில் பத்து விழுக்காடு கூட மக்களிடம் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. காக்கப்பட வேண்டிய மதுரை மதுரையும் மக்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஏனெனில், இந்தப் பதற்றம் மக்களிடம் இருந்து உருவான கோரிக்கை அல்ல. அவர்களின் அன்றாடத் தேவையில் இருந்தோ, ஆன்மீகத் தேவையில் இருந்தோ இது எழவில்லை. இது வெளியிலிருந்து உரு வாக்கப்பட்ட ஒன்று; வலிந்து திணிக்கப்படு வது. முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. நாக்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் வரை ஒரே நேர்க்கோட்டில் இணைந்து நடத்தப்படும் சதிச்செயல் இது. மக்களின் சுயமான சிந்தனைகள் மீது பாராங்கல்லாய் விழுந்து ஆக்கிரமிக்கும் முயற்சி. இன்று அமை தியாக இருக்கும் மதுரையை, அதன் மதநல்லி ணக்கத்தை என்ன விலை கொடுத்தும் காப்பதே நம் அனைவர் முன்னும் இருக்கும் கடமை. திருப்பரங்குன்றத்தைத் ‘தென்னகத்தின் அயோத்தி’ ஆக்கத் துடிப்பது அவர்களின் அரசியல் வியூகம். இந்தியா ஒரு இந்து நாடுதான், அதற்கு அரசமைப்புச் சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை என்கிற ரீதியில் ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்றால், அதன் ஒரு சாட்சியாக த்தான் திருப்பரங்குன்றத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், தேசத்தின் எந்த இடத்திலும் இவ்வ ளவு பெரிய எதிர்ப்பை மதவாதிகள் எதிர்கொ ண்டிருக்க மாட்டார்கள். அந்த ஒருங்கி ணைந்த எதிர்ப்பை மதுரையும் தமிழ்நாடும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. மத வாதிகளின் வெற்றிக்குப் பல உதாரணங்கள் இருக்கலாம்; ஆனால் மதுரை, அவர்களின் தோல்விக்கு உதாரணமாக வேண்டும்.
