குஜராத்திலும் கிறிஸ்துமஸ் அலங்காரம் அடித்து நொறுக்கப்பட்டது
டிச., 20 முதல் நாடுமுழுவதும் பெரும்பாலான இடங்களில் கிறிஸ்து மஸ் கொண்டாட்டத்தில் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கிறிஸ்தவர்கள் காயமடைந்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் மிக மோசமான அளவில் அரங்கே றின. ஆனால் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்மீதான தாக்குதல்கள் மூடி மறைக்கப்பட்டன. இந்நிலையில், குஜராத் மாநி லத்தின் முக்கிய நகரான அகமதா பாத் எஸ்ஜி நெடுஞ்சாலையின் தல்தேஜ் அருகே உள்ள பல்லேடியம் மாலில் வெள்ளியன்று கிறிஸ்தவ அலங்காரம் வைக்கப்பட்டதற்கு எதிராக ‘பகவா சேனா’ என்ற இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாலுக்கு முன்பு பகவா சேனா தலைவர் கமல் ராவல், “குஜராத்தில் மற்ற மதங்களின் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது. வணிக வளாகங்கள் ஆண்டு முழுவதும் இந்து பண்டிகைகளை மட்டுமே கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என கூச்ச லிட்டார். இதனைத் தொடர்ந்து மாலுக்குள் புகுந்த இந்துத்துவா குண்டர் கள் கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த காவல்துறையினர் கிறிஸ்துமஸ் பொருட்களை அடித்து நொறுக்கிய பின்பு பகவா சேனா குண்டர் களை பல்லேடியம் மாலிலிருந்து வெளியேற்றினர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
