அவிநாசி, ஜூன் 10- சேவூர் அருகே வடுகபாளையத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி திங்களன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் நடராஜ்(23). பனியன் தொழிலாளி. இவர், தனது நண்பருடன் திங்களன்று மாலை அருகில் உள்ள எலந்தக் குட்டை பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நடராஜ் நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டத்தில் அருகிலிருந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந் துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கபட்டு அவரைத் தேடும் பணியில் ஈடு பட்டனர். 2 மணி நேரத்திற்குப் பிறகு நடராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து, சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.