திருப்பூர், ஜன. 21 - காங்கேயம் அருகே பரஞ்சேர்வழியில் கல்விக்கடன் கேட்டு ஏழை மாணவர் ஒரு வர் வங்கி முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதைய டுத்து அவருக்கு கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. காங்கயம் அருகே பரஞ்சேர்வழி திட்டுப்பாறை இந்தியன் வங்கி முன்பு கடந்த சனியன்று ஹரிஹரன் என்ற மாணவர் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டார். இப்போராட்டம் குறித்து அவர் கூறியதாவது: காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர்வழி கிராமம் தான் என் சொந்த ஊர். கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கோபால் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன், விபத்தில் சிக்கிய நிலையில் அவரால் வேலைக்கு செல்ல முடிய வில்லை. தாயும் லேசாக மனநலம் பாதிக் கப்பட்டவர். அவராலும் வேலைக்கு செல்ல முடியாது. குடும்பத்தின் சூழ்நிலை யால் கல்லூரிக்குச் சென்று கொண்டே, விடுமுறை நாட்களிலும் கூலி வேலைக் குச் சென்று பெற்றோரை காப்பாற்றி வரு கிறேன். கல்லூரி படிப்பு செலவுக்காக காங்கயம் அருகே திட்டுப்பாறையில் உள்ள இந்தியன் வங்கியில், கடன் கோரி கடந்த 6 மாதங்களுக்கு முன் விண்ணப் பித்தேன். ஆனால் இதுவரை எனக்கு வங்கிக்கடன் கொடுக்கவில்லை. இத னால் வங்கி முன்பு கல்விக்கடன் கேட்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கினேன். கல்விக்கடன் பெற அனைத்து தகுதியும் இருந்தும் கடன் கொடுக்க மறுக்கின்றனர். மேலும் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரம் கேட்கின்றனர் என்றார். இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம் மாணவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. உண்ணாவிரதத்தை கை விட்டு, ஈரோட்டில் உள்ள வங்கி முன் னோடி அலுவலரை சந்திக்கச் சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் மாணவர் இதில் உடன்படாமல் தனது உண்ணா விரதத்தை தொடர்ந்தார். மீண்டும் அலு வலர்கள் மாணவரை அழைத்துப் பேசி கல்விக் கடன் வழங்க சம்மதித்தனர். இதையடுத்து பல மணி நேரம் நீடித்த போராட்டத்தை ஹரிஹரன் முடித்துக் கொண்டார். மாணவர் ஹரிஹரனின் கல்வி தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து கடன் வழங்குவதற்கு உயர் அதிகாரி களுக்கு அனுப்பி இருப்பதாகவும், விரை வில் கல்விக்கடன் வழங்கப்படும் என் றும் இந்தியன் வங்கி கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.