மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் அவிநாசியில் செவ்வாயன்று துவங்கியது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் பி.முத்துச்சாமி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், சிபிஐ ஒன்றிய செயலாளர் இசாக், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஏ.சண்முகம் மற்றும் காங்கிரஸ், மதிமுக, கொ.ம.தே.க, திமுக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.