திருப்பூர், பிப். 8 – கிராம ஊராட்சிகளில் வாக்க ளித்து தேர்வு செய்த மக்கள்தான் எஜமானர்கள் என்பதை வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மறந் துவிடாமல் மக்கள் பணி செய்ய வேண்டும் என கிராமப்புற உள் ளாட்சிகள் அதிகாரம் குறித்து வல்லுநர், பேராசிரியர் க.பழனி துரை கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் க.பழனிதுரை பேசியதாவது: கிராமங்களில் ஊராட்சிமன்றத் தலைவர்களா கவும், வார்டு உறுப்பினர்களா கவும் வெற்றி பெற்ற பிறகு, நாம் அதிகாரம் மிக்கவர்கள், மக்கள் சாதாரணமானவர்கள் என்று நினைத்து விடக் கூடாது. மக்கள் தான் நம் எஜமானர்கள் என்ற உண்மையை மறந்துவிடாமல் அவர்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அரசியல் சட்டப்படி அதிகாரம் பெற்றவையாக கிராம ஊராட்சி கள் அமைந்துள்ளன. இதன் சட்ட உரிமைகளை அறிந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பணி செய்ய வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு நேர்மையாகவும், உண் மையாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் சட்ட அதிகாரம் படைத்தவை ஆகும். அந்த கூட்டங்களில் பங் கேற்கும் அனைத்துத் தரப்பினரும் விவாதிப்பதற்கு உரிய வாய்ப்புக் கொடுப்பதன் மூலம் சச்சரவுகள் இல்லாமல் சுமூகமாக நடத்த முடியும். மேலும் கிராம உள்ளாட் சிகள் சம்பந்தப்பட்ட கிராமங்க ளில் இருக்கும் குடியிருப்புகள், இயற்கை வளங்கள், தெரு விளக் குகள் என விபரங்களைத் தொகுக் கலாம். அந்த ஊருக்கு என்ன தேவை என்பது குறித்து திட்டங் களை தயாரிக்கும் அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விட கிராம ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மக்களோடு நெருக்கமானவர்களாக இருக் கின்றனர். எனவே அவர்களுக்கு வேலையும் அதிகம். எனவே அவர் களுடன் உயிரோட்டமான தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல் பட வேண்டும். பெண் பிரதிநிதிகள் உள் ளாட்சி அதிகாரத்தை சுயமாக, சுதந்திரமாக பயன்படுத்த வேண் டும். அவர்களது கணவர்கள் பெண் பிரதிநிதிகள் செயல்படுவதற்கு உதவி செய்யலாம். ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்து வோராகவோ, கட்டுப்படுத்து வோராகவோ இருக்கக் கூடாது. கிராமங்களில் வளர்ச்சிப் பணி செய்ய வேண்டிய தேவைகள் ஏரா ளமாக இருக்கும். உதாரணத்துக்கு மக்களுக்கு குடிநீர், சாலை வசதி தேவை என்ற சூழ்நிலையில் எது முன்னுரிமையாக நிறைவேற்ற வேண்டிய பணி என்பதை அறிந்து அந்த திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். மக்களிடம் நெருக்கமான உறவு, விவாதம் நடத்துவதன் மூலம்தான் இதை வெற்றிகரமாக செய்ய முடியும். 1996ஆம் ஆண்டுவாக்கில் கிராமசபைகளில் அரசு அதிகாரி கள் இருக்கைகளில் அமர்ந்து, மக்கள் கீழே அமர்ந்திருக்கும் நிலையில் கூட்டங்கள் நடத்தப் பட்டன. அத்தகைய சூழ்நிலை யில், கிராமசபை என்பது அதிகா ரம் படைத்தவர்கள், சாமானியர் கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற அடிப்ப டையில் ஒரே நிலையில் அமர்ந்து தான் அந்த கூட்டங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். அதன் பிறகே கிராமசபைகளில் பங்கேற்கும் அதிகாரிகள், மக் கள் அனைவரும் ஒரே நிலையில் அமர்ந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கிராமப்புற மக்களை அதிகாரப்படுத்தக்கூடி யவை உள்ளாட்சி அமைப்புகளே. அதை உணர்ந்து மக்கள் பிரதிநி திகள் செயல்பட வேண்டும். மக்களை அதிகாரம் மிக்கவர் களாக மாற்ற வேண்டும் என்று பழனிதுரை கூறினார். இக்கூட்டத்தில் பேசிய பணி நிறைவு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் து.இராஜகோபால், கிராம சபைக் கூட்டங்கள் என் பவை சடங்குக்கு கையெழுத்துப் பெறும் அமைப்பு அல்ல. அவை உண்மையான மக்கள் பங்கேற்பு டன் நடத்தப்பட வேண்டும். தலை வர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு உரிய அதிகா ரங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று நடைமுறைகளை எடுத்துக் கூறி னார்.