உடுமலை, மார்ச் 15- பாப்பான்குளம் பிரிவு வாய்க்கால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை கால்வாய் பிரிவு 1க்கு உட் பட்டது பாப்பான்குளம். கடைமடை யான இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் இக்கால்வாயின் மூலம் பாசன வசதி பெறுகிறது. தற்சமயம் நடைபெறும் முதல் மண்டல பாச னத்தில் இரண்டாம் சுற்று தண்ணீர் பாய்ந்து கொண்டுள்ளது. இதனை நம்பி விவசாயிகள் மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்டவை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் கடை மடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதுகுறித்து பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் உதவி பொறியாளருக்கு மனு கொடுத் தனர். பரம்பிக்குளம்-ஆழியார் திட்டச் செயற்பொறியாளருக்கும், கோட்டாட்சியருக்கும் நகல் அனுப் பினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாப்பான்குளம் பிரிவில் ஞாயிறன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்த காவல் துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.