tamilnadu

img

உடுமலை அருகே குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

உடுமலை, ஜன. 9- உடுமலை அருகே குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். உடுமலை, பெதப்பம்பட்டி அருகே உள்ள மாலாகோவில் பிரிவில் ரவி என்பவர் தேனீர் கடை வைத்துள்ளார். இக்கடைக்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து அதிலிருந்த நூற்றுக்கணக்கான குளவிகள் திடீரென கடையிலிருந்தவர்களை சூழ்ந்து கொட்டியது. குளவி கொட்டியதில் நாகராஜ், கல்யாணி, மல்லீஸ்வரன் மற்றும் கடையில் இருந்த உரிமையாளர் ரவி உள் ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த னர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பச்சாகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லீஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது.