tamilnadu

img

உடுமலை அருகே சம்பளம் கேட்டு மௌன போராட்டம்

உடுமலை, அக். 1-  உடுமலை அருகே நான்கு மாதங் களாக சம்பளம் வழங்காத ஜெயின் இரிகேசன் நிறுவனம் முன்பு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மெளன போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள்  தயாரிக் கும்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்க ளுக்கு கடந்த மே, ஜூன், ஜூலை,  ஆகஸ்ட் ஆகிய நான்கு மாதங்க ளுக்கான சம்பளம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இன்று வரை சம்பளம் வழங்காத நிர்வாகத்தின்    நடவடிக்கை யைக் கண்டித்து பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிற்சாலை யின் முன்பு மெளன போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற போராட் டத்திற்கு உடுமலை சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெ.ரங்கநாதன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்ட துணை செயலா ளர் ஜெகதீசன், ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் சங்கத்தின் காஜா   உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட னர்.