தாராபுரம், ஆக. 13 - காங்கயத்தில் கைத்தறி நெசவாளர்கள் பெற்று வந்த கூலி குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக உடனடியாக மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டுமென சிஐடியு கோரியுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவர் என்.கனகராஜ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர் கள் தனியார் கைத்தறி ஜவுளி உற்பத்தியா ளர்களிடமும், கூட்டுறவு சங்கங்கள் முல மும் நெசவு செய்து வருகின்றனர். இந்நிலை யில் கொரோனா தொற்று காரணமாக கடந்த நுறு நாட்களுக்கும் மேலாக வேலை இழந்து வருமானம் இல்லாமல் நெசவாளர் கள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரு வதையொட்டி தற்சமயம் சீலை உற்பத்தி செய்ய கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தயாராகி வரும் வேளையில், காங்கயத்தில் ஏற்கனவே கைத்தறி நெசவாளர்கள் பெற்று வரும் கூலியை சீலைக்கு ரூ.300 வரை குறைத்து வழங்கி வருகிறார்கள். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக நெசவா ளர்கள் முடங்கியுள்ள நிலையில் தற்சமயம் உயர்ந்துள்ள விலைவாசியை கணக்கில் கொண்டு கூலியை உயர்த்தி வழங்குவதற்கு பதிலாக கூலியை குறைப்பது என்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவ டிக்கை ஆகும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வா கமும் உரிய முறையில் ஜவுளியை கொள்மு தல் செய்வதுடன் திருப்பூர் மாவட்டம் முழுவ தும் தனியார் கைத்தறி ஜவுளி உற்பத்தியா ளர்களிடம் பேசி கூலியை குறைக்காமல் வழங்க உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.