tamilnadu

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதி மாவட்ட ஆட்சியர் தலையிட சிஐடியு வலியுறுத்தல்

கோவை, செப். 2 -  அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை அதிகமாக உள்ளதால் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்படும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீவிர கவனம் செலுத் திட வேண்டும் என சிஐடியு கோவை  மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டு மான சங்க மாவட்ட தலைவர்  கே.மனோகரன் ஆகியோர், கோவை மாவட்ட ஆட்சியரை சந் தித்து அளித்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது: கொரோனா தொற்று  ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கோவையில் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் தேவைப் படுகிற நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் கடும் பற்றாக் குறை நிலவுவதாக தெரிய வருகிறது. கொடிசியா போன்ற பெரும் வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கை அமைப்பது பெரும் உதவி கரமானதாக இருக்கும்.  

மேலும், மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர் களுக்கு சம்பள ஊக்கத்தொகை வழங்கிடவும், வால்பாறை சின் கோனா தோட்டத் தொழிலாளர் களுக்கான கொரோனா கால ஊதி யம் உடனடியாக வழங்கிட வேண் டும். கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு இந்த ஆண்டு அரசு நிர்ண யிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத் தொகையை உடனடியாக தீர்மானித்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டிருந்தது. இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இக் கோரிக்கைகள் குறித்து உரிய பரி சீலனை செய்து நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார்.