tamilnadu

எதிர்ப்பை மீறி உரக்கிடங்கு அமைக்க முயற்சி மாநகராட்சி அலுவலர்களை மக்கள் முற்றுகை

திருப்பூர், ஜூன் 29 - திருப்பூரில் மக்கள் எதிர்ப்பை மீறி மயான இடத்தில் உரக்கிடங்கு அமைக்க வந்த மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை  அடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  மூன்று தலைமுறைகளாக வசித்து வரு கின்றனர். இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானம் உள்ளது. அருந்ததியர் மக்கள் இதை பல ஆண்டுகளாகப் பயன் படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மயானம் அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சி யில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடு பட்டு வருகிறது. எனவே மூன்று முறை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து உரக் கிடங்கு அமைக்கக் கூடாது என பொது மக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். எனினும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மாநகராட்சி அலுவலர்கள், வெள்ளியன்று மயானம் அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைப்பதற்கு ஜேசிபி இயந்திரத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அலுவலர்களை முற்று கையிட்ட பொது மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.