states

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆதரவு

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆதரவு

நாடு முழுவதும் தாலுகா அளவில் மாபெரும் போராட்டங்களை நடத்துக!

ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதர வான 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள், அரசுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் திட்டம், தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுயாதீன கூட்டமைப்புகளின் கூட்டு முன்முயற்சியால் மே 20ஆம் தேதி அகில இந்தியப் பொதுவேலை நிறுத்தம் நடைபெறும் என அறி விக்கப்பட்டு இருந்தது. ஆனால்  இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்த பொது வேலை நிறுத்தம் ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய விவ சாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா - SKM) ஆதரவு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”ஜூலை 9ஆம் தேதி அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு  ஐக்கிய விவசாயிகள் முன்னணி முழு ஆதரவு அளிக்கிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளுக்காகவும், தொழிலாளர்களின் கோரிக்கைக ளுக்கு ஆதரவாகவும் நடைபெறும். போராட்ட வடிவங்கள் உள்ளூர் அள வில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளுக்கிடையேயான கலந்துரையாடலின் மூலம் முடிவு செய்யப்படும்.   நாடு முழுவதும் உள்ள விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அனைவரையும் இந்த பொது வேலை நிறுத்தத்தை முழுமையாக ஆதரிக்கவும், தாலுகா அளவில் மாபெரும் கூட்டங்களுடன் போராட் டங்களை நடத்தவும் ஐக்கிய விவசா யிகள் முன்னணி அழைப்பு விடுக்கி றது” என அதில் கூறப்பட்டுள்ளது.