tamilnadu

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்(சிஐடியு) தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து போராடி வந்தனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.முத்துகுமார், சாம்சங் நிர்வாக தரப்பினர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 25 சாம் சங் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக எடுப்போம் என்றார்.

இதுகுறித்து சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.முத்துகுமார் தன்னுடைய சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சாம்சங் நிறுவனத்திற்கும், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கும்(சிஐடியு) ஊதிய உடன்பாடு இது வழக்கமான உடன்பாடல்ல. ஒரு சரித்திர நிகழ்வு என கூறியுள்ளார்.

மேலும் நாளை (20-5-2025 )பகல் 2-45 மணியளவில் சாம்சங் ஆலை அருகாமையில் ஒப்பந்த விளக்க வாயில் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.