திருப்பூர், ஜூலை 6 - கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அரசு பிறப்பித்திருக்கும் வழி காட்டுதல்கள், அரசாணைகளை புறந்தள் ளும் அரசுப் போக்குவரத்து நிர்வாகத்தின் செயல் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்று சிஐடியு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க அரசு பிறப்பிக்கும் வழிகாட்டுதல்க ளையோ, அரசாணைகளையோ கடைப் பிடிக்காமல் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது மிகவும் தவறான நடவ டிக்கை மட்டுமின்றி, நோய்த் தொற்றைத் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவ டிக்கைகளைச் சீர்குலைக்கும் செயலும் ஆகும். இதற்கிடையில் பேருந்துகள் இயக்கப் பட்டபோது 60 விழுக்காடு இருக்கைக ளில் பயணிகளை அமர்த்தி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வழிகாட்டப் பட்டது. ஆனால் கழக நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் கூடுதல் வருவாய் கொண்டு வர தொழிலாளர்களை நிர்பந்தம் செய்தன. மேலும் பேருந்துகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் செயல் கடைப்பிடிக்கப்படவில்லை. இத னால் பெருந்தொற்றுப் பரவலுக்கு அரசுப் போக்குவரத்து காரணமாக அமைந்துவிட் டது என மீண்டும் போக்குவரத்து நிறுத்தப் படும் நிலை ஏற்பட்டது.
ஜூலை 1 முதல் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ள நிலையில் தொழில்நுட்பப் பணி யாளர்கள், அலுவலகப் பணியாளர்களை யும் பணிக்கு வர வேண்டும் என்று நிர்பந் தம் செய்யப்படுகிறது. பேருந்துகள் இயங் காத நிலையில் அவர்களுக்கு எந்தப் பணி யும் இல்லை. போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலையில் தொழிலாளர்களை, எவ் வித பணியும் இல்லாவிட்டாலும் பணி மனைக்கு வரச் சொல்லி நிர்பந்தம் செய்வது சரியல்ல. ஏற்கெனவே கடந்த நான்கு நாட்க ளில் மதுரை, தேனி, வேலூர் மண்டலங்க ளில் 5 தொழில்நுட்ப தொழிலாளர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண் டல நிர்வாகி என்.சுப்பிரமணியம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன் உள்பட சங்க நிர்வாகிகள் ஆட்சிய ரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.