tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களின் காத்திருப்புப் போராட்டம் வெற்றி

திருப்பூர், ஆக. 25 – திருப்பூரில் ஒப்பந்த அடிப் படையில் வேலை செய்யும் தினக்கூலி தூய்மைப் பணியாளர் களுக்கு ஜூலை மாத சம்பளம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை வழங் கப்படாததால், அவர்கள் வேலை யை நிறுத்திவிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக, முதல் மண்ட லத்தைச் சேர்ந்த ஒரு பகுதி தொழி லாளர்களுக்கு சம்பளப் பட்டு வாடா செய்யப்பட்டதோடு மற்ற  பணியாளர்களுக்கும் புதன் இரவு  முதல் தொடர்ந்து இரு நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தூய்மைப் பணியா ளர்களின் போராட்டம் வெற்றி கரமாக நிறைவு பெற்றது. திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் வேலை செய்து வருகின் றனர். இவர்களுக்கு நாளொன் றுக்கு ரூ.420 கூலி நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும் இபிஎப், இஎஸ் ஐக்கு தொகை பிடித்தம் செய்வ தாகக் கூறி சுமார் ரூ.300 மட்டுமே  வழங்கப்படுகிறது.

பிடித்தம் செய் யும் இபிஎப், இஎஸ்ஐ தொகைக்கு உரிய ரசீதும் வழங்கப்படுவ தில்லை. இத்துடன் ஜூலை மாதம் வேலை செய்ததற்கு உரிய சம் பளம் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் ஆகியும் இதுவரை தரப்பட வில்லை. இந்நிலையில், செவ்வா யன்று வேலம்பாளையம் முதலா வது மண்டல அலுவலகம், நல்லூர் மூன்றாவது மண்டல அலுவலகம் மற்றும் மாநகராட்சி மாட்டுக் கொட்டகை அலுவலகம் ஆகிய  இடங்களில் தூய்மைப் பணியா ளர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலையை நிறுத்திவிட்டு சம்பளம் வழங்கக்கோரி காத்தி ருப்புப் போராட்டத்தைத் தொடங் கினர்.

 சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளரும், ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளருமான கே.ரங்கராஜ், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிர மணியம் உள்ளிட்டோர் போராட் டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் களுக்கு ஆதரவு தெரிவித்து உடனி ருந்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் மாநகராட்சி உதவி ஆணையர்கள் வாசு குமார், சுப்ரமணி மற்றும் சுகாதார அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணி ஒப்பந்ததாரர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.  

அப்போது இதுவரை வழங் காத ஜூலை மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண் டும். மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டபடி தூய்மைப் பணியாளர் களுக்கு ரூ.510 தினக்கூலியாக வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்யும் இபிஎப், இஎஸ்ஐ தொகைக்கு உரிய ஆவணங்களை வழங்க வேண் டும். அத்துடன் கொரோனா பர வும் சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், துணிவு டன் களப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய் வதுடன், உரிய பாதுகாப்பு உப கரணங்கள் வழங்க வேண்டும் என்றும் சிஐடியு சங்கத்தினர் வலி யுறுத்தினர்.

அப்போது, மாநகராட்சி நிர்வா கம் பணத்தை விடுவிக்காததால் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று ஒப்பந் ததாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதேசமயம் ஒப்பந்ததாரர்கள் பொறுப்பேற்று தாமதமின்றி தூய் மைப் பணியாளர்களுக்குச் சம் பளம் வழங்க வேண்டியது அவர் கள் கடமையாகும் என்று தொழி லாளர் தரப்பில் வலியுறுத்தப் பட்டது. மிகவும் குறைவான சம்பளமாக இருந்தாலும் அதையும் மாதக்கணக்கில் இழுத்தடித்து வருவதால் வீட்டு வாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுவதாக பெண் பணியாளர்கள் கூறினர்.

அதிகாலை நேரத்திலேயே வீட்டி லிருந்து வந்து உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் அரைகுறை யாகக் கிடைப்பதை சாப்பிட்டு விட்டு, மாலை வரை வேலை பார்த்துவிட்டு அதன் பிறகு மாலை  தான் சாப்பிடவே செல்கிறோம் என்றும் பெண்கள் கூறினர்.

 இதற்கிடையே மாநகராட்சி  ஆணையர் க.சிவக்குமார், இது தொடர்பாக ஒப்பந்ததாரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். இருப்பினும் சம்பளம் கிடைக்காமல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் உறுதி யுடன் இருந்தனர். இந்த போராட் டத்தின் தொடர்ச்சியாக, முதல் மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்யப்பட்டது. அத்துடன் புதன்கிழமை மாநக ராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த நிலையில் மற்ற பணியாளர் களுக்கும் புதன் இரவு முதல் தொடர்ந்து இரு நாட்களில் சம்ப ளம் பட்டுவாடா

செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தூய்மைப் பணியாளர் களின் போராட்டம் வெற்றிகர மாக நிறைவு பெற்றது.