உடுமலை, மார்ச் 15- தளி அருகே ரேசன் கடத்த லைத் தடுக்க முயன்ற அரசு ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை வட்டம், பெரி யவாளவாடி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் திலீப். இவர் கடந்த சனியன்று இரவு 7 மணியளவில் அலை பேசி வாயிலாக சின்னவாளவாடி பழைய பஞ்சாயத்து அலுவலக தண்ணீர் டேங்க் அருகில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக விலைக்கு வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டிப்பதாக வந்த தகவலையொட்டி அந்த இடத் திற்கு சென்றார். அங்கு சுமார் 35 முதல் 40 ரேசன் அரிசிமூட்டை களுடன் பொலிரோ பிக்கப் வாகனம் நின்றிருந்தது. விசார ணையில் கிலோ ரூ.5 ரேசன் அரிசி வாங்கி கோடந்தூர் மலை கிராமத்திற்குக் கொண்டு செல்வ தாகத் தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வரு வாய் ஆய்வாளர் மற்றும் உண வுப் பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. அப்போது உணவுப் பொருள் கடத்தல் தடுப்புத் துறை யினர் அறிவுரையின்படி கண் காணித்து வந்தார் திலீப். அப்போது அங்கே வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவ ராஜ் வாகனத்தை விடுவிக்கச் சொன்னார். நான் மறுத்தபோது உள்ளூர் நபரான ராமலிங்கம் மகன் பொன்ராஜ் என்பவர் குடி போதையில் திலீபைக் கடுமை யாகத் தாக்கியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகள் பேசியும் கொலை செய்து விடுவதாக வும் ஊர்மக்கள் முன்னிலையில் மிரட்டினார். தொடர்ந்து வாக னத்திலிருந்த ரேசன் அரிசி மூட் டைகளை இறக்கி வேறு இடத் திற்குக் கொண்டு சென்றனர். இந் நிலையில், உணவுக் கடத்தல் தடுப்புபிரிவினர் மற்றும் காவலர் கள் வந்து சில ரேசன் மூட்டைகளு டன் வாகனத்தைப் பறிமுதல் செய் தனர். காவல் ஆய்வாளரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது தாக்கியவர்களையும், கடத்தியவர்களையும் அடையா ளம் காட்டப்பட்டனர். ஆனால் அவர்களுடன் காவல் ஆய்வா ளர் மகேஸ்வரி சிரித்துப்பேசிய தோடு, வாளவாடி மக்கள் கூட் டத்தினரின் முன்பே தலையாரி ஆகிய உனக்கு வாகனத்தை பிடிக்கும் அதிகாரம் உள்ளதா? என மிரட்டினார். மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் அவர்கள் என்னை அடிக்க ஆள் தயார் செய்ததாகவும், பழ னிச்சாமியை மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி என்மீது வழக்குப்பதிவு செய்ய ஆலோ சணை கொடுத்ததாகவும் அலை பேசி பதிவுகள் கிடைத்துள்ளது. புட்செல், தளி காவலதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத் தலை வர் ஆகியோர் ஒன்று கூடி ஆலோசித்து திட்டமிட்டு செயல் படுவதைப் போல் தெரிகிறது. ஏற்கனவே ரேசன் அரிசி கடத் தப்படும் தகவல் அளித்த கிராம நிர்வாக அலுவலர் மணிவண் ணன் மிரட்டப்பட்ட நிலை யில், கடத்திய நபரும் கைது செய்யப்படவில்லை. எனவே, தனது வேலை மற்றும் உயிருக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளதாக பெரியவாளவாடி கிராம உதவியாளர் தி.திலீப் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.