திருப்பூர், பிப். 20- காங்கேயத்தில் மின்விளக்கு பொருத்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கா ததால் அப்பகுதி பொதுமக்கள் இருளில் தவித்து வரு கின்றனர். காங்கேயம் நகராட்சி, அய்யாச்சாமி நகர், முதல் வடக்கு வீதி, இரண்டாவது வீதி, உள்ளிட்ட பகுதியில் தலா ஒரு தெருவிளக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது. ஆனால், இதுவரை இந்த தெருவிளக்கிற்கு மின் இணைப்பு வழங்காததால் விளக்கு எரிவதில்லை. இதனால், அப்பகுதி முழுவ தும் இருளில் மூழ்கி உள்ளது. எனவே, உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.