tamilnadu

img

ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை உறுதி செய்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

உடுமலை, பிப். 27- உடுமலை, திருப்பூர், மடத்துகுளத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தற்காலிக ஒப்பந்தம் மற்றும் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும், வரைமுறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். ஓய்வூதிய நிதி  ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தைக் கலைத்திட வேண் டும். தேசிய ஓய்வூதியத்தின் திட்ட சந்தாதாரர்கள் அனைவரையும் பயன ளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த் திட வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதியமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வை கட் டுப்படுத்த வேண்டும் பல்வேறு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று மடத்துகுளம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை துணைத் தலைவர் மதன்குமார் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை தலைவர் முகமது இசாக் நன்றி கூறினார்.
உடுமலை
இதேபோல் உடுமலை வட்டாச்சி யர் அலுவலகம் முன்பு அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தா.வைரமுத்து, கே.வெங்கிடுசாமி உள்ளிட்ட அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.
திருப்பூர் 
திருப்பூர் அருகே மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வா கிகள் சதீஷ் , ராமன், மா.பாலசுப்ரமணி யன், அம்மாசை, உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவிநாசி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், ரமேஷ், பரமேஸ்வரன், பாலசுப்பிரமணியம், விஜயலட்சுமி, கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.