திருப்பூர்,ஜன.01- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல் லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மற்றும் இளைஞர் செஞ்சி லுவை சங்கம் இணைந்து வகுப்பறை களுக்கு வர்ணம் அடித்து சித்திரம் வரையும் நிகழச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் குழுக்க ளாக பிரிந்து வர்ணம் அடிக்கும் பணி யில் ஈடுபட்டனர். மாதிரி வகுப்பறை யாக விலங்கியல் துறையில் விலங்கு கள்,பூச்சிகள் சம்பந்தமாக சுவரில் ஓவியங்கள் வரைந்தனர். இதுகுறித்து அலகு-2 ஒருங்கிணப்பாளர் மோகன் குமார் கூறுகையில், புத்தாண்டு பிறப் பதை முன்னிட்டு ஒவ்வொரு வகுப்ப றையிலும் அந்தந்த பாடத்திற்கு ஏற்ப ஓவியங்களை வரைவது என முடிவு எடுத்துள்ளோம்.அவ்வாறு வரைவ தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்க ளுக்கும் புத்துணர்வு ஏற்படும், வகுப்பு எடுக்கும் சூழல் நன்றாக அமையும், என்றார்.இந்நிகழச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி முதல்வர் தீபா செய்தி ருந்தார்.