tamilnadu

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம்

 அவிநாசி, ஜூலை 29- அவிநாசி அடுத்த குன்னத்தூரில் அடிப்படை  வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு அப் பகுதிமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் பேரூராட்சிக்குட் பட்ட 15-வது வார்டு பகுதியில் பொன்காளியம்மன் நகர் உள்ளது. அப்பகுதி மக்கள் 20 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் இணைப்பு இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும், ஆர்ப் பாட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.  இந்நிலையில், பேரூராட்சி அலுவலகம் முன்பு அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கே.சாவித்திரி  தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா கமிட்டி செயலாளர் கே.ஏ.சிவ சாமி, கமிட்டி உறுப்பினர் ச.பன்னீர்செல்வம், நகர செய லாளர் பி.சின்னசாமி மற்றும் மேற்கு கிளை செயலாளர் கே.ஏ.ராஜ்பாரத் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், குன்னத்தூர் பேரூராட்சி செயல் அலு வலர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் போராட்டக்குழு வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுயளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்து களைந்து சென்றனர்.