விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலியை குறைத்து வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிளைச் செயலாளர் எம்.உமாசாந்தகுமாரி தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஏ.நடராஜன், தலைவர் பி.அய்யனார், பொருளாளர் எஸ்.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அறிவித்துள்ள கூலியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.