districts

img

மாற்றுத் திறனாளி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருக்கும் போராட்டம்

நாகர்கோவில், ஜன. 3-  நான்காண்டுகளாக குடிநீர் இணைப்பு கோரும் மாற்றுத்திற னாளிக்கு உடனடியாக குடிநீர் வழங்க கோரி காத்திருப்பு போ ராட்டம்  நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியம் எள்ளுவிளை ஊராட்சியில் உள்ளது வைராகுடியிருப்பு. இங்கு குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசிப்பவர் ஜி.ஜெபசிங். இவரது வீட்டுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க 2019 இல் உத்தரவாகி உள்ளது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி குடிநீர் இணைப்பு மறுக்கப்பட்டது.  இந்நிலையில் பழவிளையில் உள்ள இராஜாக்கமங்கலம் பிடிஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜன.3) காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. வட்டாரத் தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் தங்ககுமார், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், துணைத் தலைவர் கள் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ், எஸ்.சார்லஸ், எம். அருள், மாநிலக்குழு உறுப்பினர் லிட்டில் பிளவர், மிக்கேல் நாயகி, ஜெபசிங் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர். இதனிடையே அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்க முயன்றனர். ஆனால் வழக்கறிஞர்கள் சிலரை முன்னிறுத்தி தடை ஏற்படுத்தினர். அதிகாரிகள் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். போராட்டம் தொடர்கிறது.