திருப்பூர், ஆக. 30 – தமிழக அரசு அமல்படுத்தும் இ -பாஸ் நடைமுறையால் அண்டை மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவ தால். இந்நடைமுறையை ரத்து செய்து, பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டுமென அனைத்துத் தொழிற்சங்கங் கள் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு. சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஏடிபி, ஐஎன்டியுசி, எம்எல்எப், எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பொது முடக்கம் ஐந்து மாத காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாத காலமாக பல தளர்வுகள் அளிக்கப்பட் டுள்ளதால் திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கி உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது முடக்கத்தின் காரணமாக வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு வருமானமின்றி தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது மற்றும் இ-பாஸ் நடைமு றைகளால், வெளி மாவட்டத்தில் இருந்து தினசரி வேலைக்கு வந்து செல்லும் பனியன் தொழிலாளர்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தொடர்ச்சியாக முடக்காமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுக ளுடனும், கட்டுப்பாடுகளுடனும் பேருந்தை இயக்கிடவும், இ-பாஸ் நடைமுறைகளை முற்றிலும் கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பனியன் தொழிற் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.