tamilnadu

சாலையோர வியாபாரிகள் கடன் பெற சிறப்பு முகாம்

திருப்பூர், செப்.11- கொரோனா பொது முடக்கக் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் திருப்பூர் மாந கராட்சியில் செப்டம்பர் 17, 18 ஆம் தேதி களில் நடைபெறுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 15 வேலம்பாளையம், தொட்டிபாளையம் மண்டல அலுவலகங்களிலும், 18ஆம் தேதி  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நல்லூர், ஆண்டிபாளையம் மண்டல அலுவலகங்களிலும் முகாம் நடைபெறும். மத்திய அரசின் இந்த கடனுதவித் திட்டத் தில் மூலதனக்கடனாக ரூ.10 ஆயிரம் 7  சதவிகிதம் வட்டி மானியத்துடன் வழங் கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளில் அடையாள அட்டை பெற்ற சாலை யோர வியாபாரிகள், கணக்கெடுப்பில் விடு பட்டு அடையாள அட்டை பெறாதோர், நகர்ப்புற பகுதிகளில் மார்ச் 24ஆம் தேதிக்கு முன்பு வியாபாரம் செய்தோர், அருகாமை கிராமப்புறங்களில் இருந்து அன்றாடம் நகர்ப்பகுதிகளுக்கு வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். அடையாள அட்டை, நல வாரியம் மற்றும் சாலையோர வியாபா ரிகளுக்கான சங்கத்தின் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் எண், வங்கிக் கணக்கு  எண், அலைபேசி எண் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.  இம்முகாமில் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட இணையதளப் பக்கத்தில் பதிவு செய்திடவும், வங்கியாளர்கள் மூலம் உடனடியாக நிதி விடுவிப்பு அனுமதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் நடைபெறும் நாட்கள் மட்டு மின்றி அனைத்து வேலை நாட்களிலும் உரிய ஆவணங்களுடன் நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.