tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை

அவிநாசி, ஜூலை 19- குன்னத்தூர் அருகே வெள்ளரவெளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறை யினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளரவெளி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கண் ணன் (27). கட்டிடத் தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 1 வயது சிறுமியை,  கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப் படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அச்சிறுமி யின் பெற்றோர் குன்னத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,  அவிநாசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை வெள்ளியன்று கைது செய்தனர்.