tamilnadu

img

விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்தா? காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அவிநாசி, மே 26- தமிழக அரசுந் வழங்கும் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்வதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதிகளில் புதிய,  பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், சிந்தாமணி பேருந்து நிறுத்தம், சேவூர், தெக்கலூர், பழங் கரை ஆகிய பகுதிகளில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் கோபால கிருஷ்ணன், நவநீத கண்ணன், மாரிமுத்து, ராமசாமி, ராவாளன், நஞ்சப்பன், தெக்கலூர் மணி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.