tamilnadu

img

அவிநாசி அருகே சாக்கடை அமைக்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

அவிநாசி, பிப்.13- சாக்கடை கால்வாய் அமைக்கக் கோரி திருமுருகன்பூண்டி பேரூ ராட்சி அலுவலகத்தில் வியாழ னன்று பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவிநாசி வட்டம், திருமுருகன் பூண்டி 11ஆவது வார்டிற்குட்பட்ட கணபதி நகர் பகுதியில் சுமார் 70க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரூ50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இப்பணிகளுக்கு முன்பாக கணபதி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், முன் னாள் கவுன்சிலர் பொன்னுசாமி தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே சாக்கடை கால்வாய் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள்    நடைபெறவில்லை. முறையான சாக்கடை வசதி இல்லா ததால் கடந்த மூன்று மாதங்களில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட் டது. இதையெல்லாம் அறிந்தும் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் அமைக்க மறுக்கிறது. எங்களது கோரிக்கை நிறைவேற் றப்படவில்லையெனில் போராட்டம் தீவிரமாகும் என்றனர். இதைத் தொடர்ந்து  பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர்.