திருப்பூர், ஜூன் 4 - வருமானம் இன்றி தவிக்கும் விவ சாயத் தொழிலாளர்கள் குடும்பத் திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங் கக்கோரி தமிழகம் முழுவதும் விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
கொரோனா நோய்த் தொற்று பர வல் ஊரடங்கு காலத்தில் வேலை யின்றி, வருமானம் இன்றி இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும் பத்திற்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட் டத்தில் 200 நாட்கள் வேலையும், தின சரி ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். ரேசன் பொருட்கள், மளிகைப் பொருட் கள் இலவசமாக வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற் றும் நுண்கடன் நிறுவனங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஏழை மக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் வியாழனன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் மற்றும் வரு வாய் ஆய்வாளர் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் தலைமையிலும், மடத்துக்குளம் வட் டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை யிலும், குடிமங்கலம் வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்தில் ஒன்றியப் பொரு ளாளர் பஞ்சலிங்கம் தலைமையிலும், பெதப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுலகத்தில் ஒன்றியச் செயலாளர் வி.தம்புராஜ் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளி ஆர்எஸ் பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்டப் பொருளாளர் ஆர்.மணியன் தலைமை யிலும், குன்னத்தூர் வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்தில் ஒன்றியச் செயலா ளர் கே.பிரகாஷ் தலைமையிலும், திருப்பூர், பெருமாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியம் தலைமையிலும் மனுக் கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொங்கலூர் வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையி லும், பல்லடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.துரைசாமி தலைமையிலும், வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலை மையிலும், குண்டடம் வருவாய் ஆய் வாளர் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் மனுக் கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போல், காங்கேயம் வட்டாட்சியர் அலு வலகத்தில் சிபிஎம் காங்கேயம் தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி மற் றும் தாராபுரம் வட்டாட்சியர் அலுவல கத்தில் சிபிஎம் தாராபுரம் தாலுகா செய லாளர் என்.கனகராஜ் ஆகியோர் பங் கேற்று மனு அளித்தனர். இதற்கிடையே, அவிநாசியில் விவ சாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அளித்த மனுவை வாங்க மறுத்த துணை வட்டாட்சியரை கண்டித்து தர்ணா போராட்டம் நடை பெற்றது. இதில் விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். மல்லப்பன், ஒன்றியச் செயலாளர் ஏ. சண்முகம், விவசாய சங்க ஒன்றிய செய லாளர் எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்டத் தலைவர் வி.தங்கவேல், மாவட்டப் பொருளாளர் அன்பழகன் தலைமையிலும், பெத்தநாயக்கன்பா ளையம் வட்டாட்சியர் அலுவலக்தில் வட்டத் தலைவர் பி.கந்தசாமி, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத் தலைவர் இ.லா.கலைமணி, கெங்க வள்ளி ஒன்றியம் தம்பம்பட்டியில் வட்டச்செயலாளர் வெங்கடாச்சலம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டச் செயலாளர் சின்ராஜ் உள்ளிட் டோர் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
இதேபோல், காடையாம்பட்டி ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் மாவட் டச் செயலாளர் ஜி.கணபதி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத் தலைவர் பி.எஸ்.பழனியப்பன் தலை மையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுது. இதில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். சங்ககிரி வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டச் செயலாளர் செந்தில்கு மார், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டத் தலைவர் முத்துகண்ணு, கொளத்தூர் பகுதியில் வட்டச் செயலாளர் கே.முனியம்மாள் தலைமையிலும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
கோவை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் கோவை மாவட்ட துணை செயலாளர் கே.மகாலிங்கம், பொள்ளாச்சி தாலுகா செயலாளர் முரு கேசன், ஆனைமலை ஒன்றிய தலைவர் ஏ.துரைசாமி, ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், சிபிஎம் பொள்ளாச்சி நகர செயலாளர் கே.வெள்ளியங்கிரி, ஆனைமலை சிபிஎம் தாலுகா செயலா ளர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாய தொழிலாளர் சங்கத்தின் அந்தி யூர் தாலுகா தலைவர் கே.குருசாமி, தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரி முத்து, தாலுகா பொருளாளர் எஸ்.தியா கராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஜி.மயில்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்க மாநில தலைவர் பி.டில்லி பாபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட் டக்குழு உறுப்பினர் பி.எம்.முருகே சன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.அன்பு, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இ.கே. முருகன் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.