tamilnadu

கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தலா ரு.5 ஆயிரம் நிவாரணம் வழங்குக தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தாராபுரம், மார்ச் 25 - ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சிரமத் திற்குள்ளாகியுள்ள கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தலா ரு.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெச வாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.கனகராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைத் தறி நெசவாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்கள் தினந்தோறும் சேலைகளை நெசவு நெய்து, வார இறுதியில் கைத்தறி உற்பத்தியாளர்களிடம் கொடுத்து கூலி வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்சமயம் கெரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்த ரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் வேலை எதுவும் செய்யமுடியாமல் எந்தவித வருமானமும் இன்றி குடும்பத் தோடு மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே கைத் தறி நெசவாளர்களின் வாழ்க்கை நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு குடும்பத்திற்கு தலா ரு.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.