அவிநாசி, ஜூன் 27 - அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சியில் முறை யாக குடிநீர் வழங்கக்கோரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி யிடம் மனு அளிக்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நி லையில், இப்பகுதி மக்களுக்கு அன்னூர்-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினசரி ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
ஆனால் தற் போது தினசரி வெறும் 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே கிடைக் கப் பெறுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல நாட்களாக குடிநீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல், துலுக்க முத்தூர், வடுகபாளையம் ஊராட் சிகளிலும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் நடுவச்சேரி, துலுக்க முத்தூர், வடுகபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முறையாக குடிநீர் விநி யோகிக்க வலியுறுத்தி வெள்ளியன்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ராஜேஷிடம் கோரிக்கை மனு அளித் துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ராஜேஷ், சனியன்று ஊராட்சிகளை ஆய்வு செய்து முறையான குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்னூர் -அவி நாசி கூட்டுக் குடிநீர் திட்டம் பராமரிப்பதற்காக தனியா ருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால் முறையான குடிநீர் ஊர் பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என குற் றஞ்சாட்டுகின்றனர்.