திருப்பூர், செப். 17- திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர் வாகம் தோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தனி கவ னம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், தமிழக முதல்வ ருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதி களிலும், திருப்பூர் மாநகரிலும் சமீப நாட்களாக கொரோனா நோய்த்தொற்று மிக அதிக அள வில் பரவி வருகிறது. அதேசமயம் கொரோனா தொற்றுக்கு ஆளான வர்களுக்கு சிகிச்சை அளிப்பதி லும், சுகாதார வசதியை பராமரிப் பதிலும் மாவட்ட நிர்வாகமும், சுகா தாரத் துறையும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வருகின் றன. அத்துடன் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் தோல்வி அடைந்துவிட் டது.
குறிப்பாக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டுள்ள தாக அரசு அறிவித்திருந்தாலும், அங்கு போதிய மருத்துவர்கள், மருத்துவக் கட்டமைப்பு, கழிப்பி டம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் முறையாக பராமரிக்கப்படா மல் உள்ளன. நோய்த்தொற்று பர வல் அதிகமாக இருப்பதுடன் கால நிலையிலும் மாற்றங்கள் அதிக ரித்திருப்பதால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் ஆகிய பாதிப்புக ளும் அதிகரித்துள்ளன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வெளி யூர், வெளி மாநிலத் தொழிலாளர் கள் வருகையும் அதிகரித்து உள் ளது. இத்தகைய நிலையில் கொரோனா மருத்துவப் பரிசோத னையை பரவலாக அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமா கும். ஆனால், தற்போது மருத்து வப் பரிசோதனையை குறைக்கும் முயற்சியில் அரசு நிர்வாகம் ஈடு பட்டிருப்பதாக தகவல் வருகிறது. இது நோய்ப் பரவலைக் கட்டுப் படுத்துவதற்கு மாறாக, பெரும் எண்ணிக்கையில் மக்கள் நோய்த்தொற்றில் சிக்கும் நிலையை ஏற்படுத்தும். எனவே, தினசரி பரிசோதனை எண்ணிக்கையை சுமார் 6 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும். அதே போல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் காலதாமதம் இல் லாமல் அறிவிக்க வேண்டும்.
காய்ச்சல் கண்டறியும் முகாம் களை மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவில் நடத்த வேண்டும். இத்த கைய முகாம்கள் நடைபெற உள்ள விபரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் முன்னரே விளம்பரம் செய்ய வேண்டும். இது தவிர, நோய்த் தடுப்பாற் றலை அதிகரிக்கும் சித்த மருத்து வத்தின் கபசுர குடிநீர், ஹோமியோ மருத்துவத்தின் ஆர்சனிக் ஆல்பம் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தேவையான அளவு கிடைக்க வும், அனைத்துப் பகுதி மக்களுக் கும் இந்த தடுப்பு மருந்து கொடுக் கவும் விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத் துவதற்கு தமிழக அரசு சிறப்பு கவ னம் செலுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அம்மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.