விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிவாரணமாக வழங்கிடக்கோரி சக்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் சக்தி தாலுகா செயலாளர் விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.சகாதேவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியதலைவர் பி.சுப்ரமணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.