tamilnadu

img

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கிடுக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

உடுமலை, ஜுன் 17- ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலையில் கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 11 ஆவது மாநாடு ஞாயிறன்று வி.கே.பாலு  தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின்  மாநில  செயலாளர் குமார், சிஐ டியு மாவட்டத் துணை செயலாளர் எஸ். ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்க தலைவராக கி.கனகராஜ், செய லாளராக பழனிசாமி, பொருளாராக எம்.கனகராஜ், துணை தலைவராக எஸ்.பாப்பாத்தி, துரைசாமி, துணை செயலாளராக வி.கே.பாலு, செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த மாநாட்டில், வீடு இல்லாத கட்டு மான தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்க வேண் டும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தொழி லாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய பணப்பயன் களை தாமதமின்றி வழங்க வேண்டும். கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஜூன் 27 ஆம் தேதியன்று உடுமலை யில் கண்டன இயக்கம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.