tamilnadu

img

இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக வழங்கிடுக விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 22- இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக வழங்கிட வலியுறுத்தி விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய பட்டியலிலிருந்து அடிப் படை காய்கறிகளை விலக்குவதை கைவிட வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்டுள்ள  சிறு, குறு விசைத்தறி கூடங்க ளுக்கு  வட்டியில்லாத கடன் வழங்கிட வேண் டும். மின்சாரச் சட்டம் 2020-ஐ திருத்துவதை கைவிட்டு, விசைத்தறிக்கு கூடங்களுக்கு இலவச மின்சாரத்தை100 யூனிட்டிலிருந்து, 1000 யூனிட்டாக அதிகப்படுத்திட வேண் டும்.

விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலா ளர்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண் டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ7 ஆயி ரத்து 500 என மூன்று மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்.  ஊரடங்்கால் பாதிக் கப்பட்டுள்ள   விசைத்தறித் தொழிலை சீர மைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி  நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளை யம் பேருந்து நிறுத்தத்தில் சிஐடியு விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலை வர் எம்.அங்கமுத்து தலைமை வகித்தார். இதில், சம்மேளன மாநில பொதுச்செய லாளர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் எஸ்.முத் துக்குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர்  ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.