உடுமலை, செப். 17- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று உழைப்பு தானம், கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன. சாலை பணியாளர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு சங் கத்தின் உடுமலை கோட்ட தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பெரியவாள வாடி பகுதியில் பேரணி நடை பெற்றது. பின்னர் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தொட்டில்களை வழங்கினார்கள். மேலும் அங்கு உள்ள வாரசந்தையில் புதிதாக மரக் கன்றுகள் நடப்பட்டு வேலிகளை அமைத்தனர். இந்த மரக்கன்றுகளை தொடச்சியாக பாதுகாக்கும் வகையில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திலிப் தலைமை யில் மரக்கன்று பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. பெரிய வாளவாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறி யாளர் மு.கிருஷ்ணமூர்த்தி, தனபால், கணேஷ் குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிர மணியன், சண்முகவதி, அரசு மருத்துவ அலு வலர் ஆனந்த்குமார், மருந்தாளுநர் சங்கத் தின் சுமித்தா, அரசு துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெருமாள் , ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாலையில் அமைப்பு தின மற்றும் மக்கள் சேவைகள் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் சாலை பணியாளர் சங்கத் தின் மாநில நிர்வாகிகள் மா.பாலசுப்பிர மணியன், ஆ.அம்சராஜ், வே.கணேசன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைர முத்து, திலிப், அன்வருல்ஹக் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 19 வது அமைப்பு தின கொடியேற்று விழா நிகழ்வு அவிநாசி பயணி யர் விடுதி முன்பு நடைபெற்றது. இதில் சங் கத்தின் நிர்வாகிகள் ஆர்.முனுசாமி, பி.கருப் பன், ஏ.முருகேசன், ஆர்.ராமன், ஆர்.கருப் பன், எம்.வெங்கட்டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் மூலனூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கொடியேற்று விழாவும், மரக்கன்று நடும் விழாவும் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உட்கோட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேக் வழங்கப்பட்டது. உட்கோட்ட செயலாளர் சிவராசு, கோட்ட இணை செயலாளர் மணிமொழி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ஞானசேகரன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகி லிங்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உட்கோட்ட பொருளாளர் தனபாலன் நன்றி கூறினார்.