திருப்பூர், மார்ச் 14 - தமிழகத்தில் மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பை நிறுத்தி வைப்பதாக மாநில அரசு அறிவித் திருப்பது கடந்த ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற மக்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் தியாகி கே.ரத்தின சாமியின் 18ஆவது நினைவு தின நிகழ்வில் பங்கேற்று, தியாகி கே. ரத்தினசாமி நினைவிடத்தில் கே. பாலகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இடு வாய் பேருந்து நிறுத்தத்தில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: மக்களுக்குச் சேவை செய்வது மட்டுமே லட்சியம் என வாழ்ந் தவர் கே.ரத்தினசாமி என்பது அவருக்கு மட்டுமல்ல, எங்கள் இயக்கத்துக்கும் பெருமை. மக் களின் இதயங்களில் இருந்து ரத்தின சாமியை மறைக்க முடியவில்லை என்பதைத்தான் இடுவாய் ஊராட்சி யில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருப்பது உணர்த்து கிறது. இந்த ஊராட்சியை முதன்மை யான ஊராட்சியாக மாற்றிக் காட்டு வதற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் வேலை செய்வார்கள். மோடி ஆட்சியில் பொருளா தாரம் திவாலாகிப் போயிருக்கிறது. தேர்தல் முடிந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டது, அவர்கள் சொன்ன ஒரு வாக்குறுதியையாவது பாரதிய ஜனதா கட்சியினர் நிறைவேற்றி இருக்கிறார்களா? இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது? சுகா தாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வற்றையும் தனியார்மயம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு மக்கள் வாக்களித்தது நாட்டை ஆள் வதற்கா? அல்லது, எல்லாவற் றையும் விற்பதற்கா? எம்எஸ்சி பயோகெமிஸ்ட்ரி படித்த மாணவி வேலை கிடைக் காமல் துப்புரவுப் பணியாளராக மாறி இருக்கிறார். அதேபோல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர் துப்புரவுப் பணி யாளராகி இருக்கிறார். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற் படுத்தித் தருவதைப் பற்றியெல் லாம் மோடி அரசுக்குக் கவலை இல்லை. ஆனால் கடந்த இரண்டு வருடத்தில் அதானி, அம்பானி போன்ற பெரிய கார்ப்ரேட் முதலாளிகளுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை கொடுக்கிறார்கள். இந்த தொகை இருந்தால் நாட்டு மக்களுக்கு நல்ல சாலை வசதி, குடிக்க நல்ல குடிநீர், வீட்டு வசதி ஏற்படுத்தித் தர முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. நாடு திண்டாடிக் கொண்டி ருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல் வீடு, வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்களாம். குடி யுரிமை இல்லை என்றால் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்க வேண்டும். நாட்டை விட்டு வெளி யேற்றினால் அவர்களை அழைத்துக் கொள்வதற்கு எந்த நாடும் தயாராக இல்லை. அப்படி யானால் திறந்தவெளி சிறைச் சாலையில் அடைத்து வைப் பார்கள். உயிரோடு புதைப்பதும், திறந்தவெளி சிறைச்சாலையில் ஒருவரை அடைப்பதும் ஒன்று தான். குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் போராடுகிறார்கள். ஆனால் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அவர்க ளுக்காவது பள்ளிவாசல்களில் பிறப்பு, திருமணம், மறைவு போன்ற விசயங்களைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள். ஆனால் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன ஆவணம், ஆதாரம் இருக்கிறது. இஸ்லாமி யர்கள் போராடுவது அவர்களுக்குச் சலுகை கேட்டு அல்ல, இஸ்லா மியர்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை. ஏழு கோடி தமிழர்களுக்காக, 132 கோடி இந்தி யர்களுக்காகப் போராடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக பேட்டை ரவுடியைப் போல் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் பேசி வன்முறையைத் தூண்டி வருகின்றனர். காவல் துறை என்ன செய்கிறது? பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவோர் மீது என்ன நடவ டிக்கை? தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பிஜேபி பினாமி ஆட்சியா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். மக்கள் தொகைப் பதிவேடு கணக்கெடுப்பை ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்க இருந்ததை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஒன்றரை மாத கால மாக இஸ்லாமியர்கள் போராடி யதற்கும், மதச்சார்பற்ற முற் போக்குக் கட்சிகள் தொடர்ச்சி யாகப் போராடியதற்கும் கிடைத்தி ருக்கும் வெற்றியாகும். நாட்டு மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தக் கூடாது. பாஜக இஸ்லாமியர் களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்து வர்கள், சிறுபான்மையினர் மட்டு மின்றி 130 கோடி இந்தியர்களுக்கும் விரோதமான கட்சியாகும். எனவே மக்கள் சாதி, மத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மோடி அரசு ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து முடிக்கும்போது, இந்தியா என்ன மாதிரி இருக்கும் என்பதே தெரி யாது. எனவே் நாட்டைக் காப்பாற்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதர வளிக்க வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார். முன்னதாக இப்பொதுக் கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் இடு வாய் கிளைச் செயலாளர் கே.கருப்பு சாமி தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பா. லட்சுமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, ஆகியோர் உரையாற்றினர். இதில் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் உள்பட கட்சி அணி யினர், இடுவாய் கிராம மக்கள், தியாகி ரத்தினசாமி குடும்பத்தார் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக இடுவாய் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பிருந்து கே.ர த்தினசாமி நினைவஞ்சலி ஊர்வலம் இடுவாய் கிராமத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக அவரது நினை விடத்தை அடைந்தது. அங்கு தியாகி ரத்தினசாமியின் சமாதியில் நூற்றுக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.