tamilnadu

குன்னத்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 16 – திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கொமாரகவுண்டன்பாளையம் ஊராட் சியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பி னர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி ஆயி கவுண்டன்பாளையம் - ராமாயிசாலை செல் லும் பாதை பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க முயற்சி நடைபெற்று வருவ தாகவும், இதைத் தடுத்து நிறுத்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்ப டையில் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோருக்குக் கடி தம் எழுதப்பட்டுள்ளது. எனினும் பொது மக்கள் பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்பையும் மீறி அந்த இடத்தில் கடையைத் திறக்க முயற்சிப்பதா கவும் ஊர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுபானக் கடையை திறப்பதை கைவிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ள னர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பிலும் மதுபானக் கடைத் திறப்பதற்கு எதிராக மனு அளிக்கப்பட் டுள்ளது.