tamilnadu

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பூர், செப்.4- திருப்பூரில் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டில் வழி காட்டி ஆசிரியர்களாக செயல்படு வோருக்கு பயிற்சி முகாம் நடை பெற்றது. 27 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழி காட்டி ஆசிரியர்களுக்கான பயுற்சி  முகாம் திருப்பூர் நஞ்சப்பா ஆண் கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதனன்று நடைபெற் றது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் இருந்து 61 ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆ.ஈசுவரன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட் டைப் பற்றியும், ஆய்வு செய்யும் வழிமுறைகளையும் விளக்கிக் கூறினார். பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியின் குழந்தை விஞ்ஞானி பிரகல்யா, 2016ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேசியளவில் கலந்து கொண்ட மாணவி ஆவார். இவர் தன் குழுவி னர் செய்திருந்த ஆய்வான, நஞ்ச ராயன் குளத்துப் பறவைகள் பற் றிய ஆய்வை தாங்கள் எப்படி செய் தோம் என்பதை விளக்கிப் பேசி னார். கருத்தாளர் தினேஸ்குமார் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான ஆய்வுத் தலைப் புகள் பற்றி கூறினார்.
ஆன்லைன் பதிவு
இந்த ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட் டில் பங்கேற்கும் குழந்தைகள் தங்கள் பெயரை ஆன் லைனில் தான் பதிவு செய்ய முடியும். இந்த ஆய்வை 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஆன் லைனில் பதிவு செய்து தங்க ளின் ஆய்வை உடனே தொடங்க லாம். இரண்டு மாதம் இந்த ஆய் வினை செய்யும் மாணவர்கள் மாவட்ட அளவில் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநாட் டில் கலந்து கொள்வார்கள். இதில் தேர்வாகும் சிறந்த ஆய்வுகள், நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடை பெறும் மாநில மாநாட்டிலும், இங்கு தேர்வாகும் 30 ஆய்வு மாண வர்கள், அகில இந்திய அளவில் டிசம்பர் 27 முதல் 31 வரை நடை பெறும் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இதுதவிர ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை பிரதமர் துவக்கி வைக்கும் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் தேர்ந்தெடுக்கும் குழந்தை விஞ்ஞானிகள் கலந்து கொள்வார்கள். தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு மத்திய அர சின் ஓர் அங்கமான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் மூலம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆ.ஈசுவரன், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், திருப்பூர், அலை பேசி 9443024086 அல்லது trudisttnsf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும்.