அவிநாசி, ஜூன் 21- அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தைத் திருட முயற்சி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட சேவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்த சாந்தலிங்கம் என்பவர் தேநீர் அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார்.
அப்போது கங்கவார் வீதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் கணேசன் நிறுத்திய இருசக்கர வாகனத்தைத் திருட முற்பட்டுள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட சாந்த லிங்கம் கூச்சலிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகு திப் பொதுமக்கள் கணேசனை கையும் களவுமாக பிடித்து, அவிநாசி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேசனை சிறையில் அடைத்தனர்.